வெள்ளி, 7 செப்டம்பர், 2012

குழந்தைகள் எதற்காக....


ஒரு மாணவன் , திறமையாக படம் வரைவான். அவனுக்கு கட்டடங்களின் மீது ஒரு கற்பனைத்திறன் இயல்பாகவே இருந்தது.
அவனது வீட்டில் அவனை ஒரு மருத்துவனாக ஆக்க விருப்பப்பட்டு, மருத்துவக்கல்லூரிக்கு விண்ணப்பிக்க வற்புருத்துகின்றனர். அப்போது அவன் , தனது விருப்பமான கட்டடக்கலைத்துறையில் தான் கால்பதிக்கப் போவதாக சொல்கிறான். அப்போது அவர்களின் பெற்றோர்கள், சந்தையில் கத்தரிக்காய் வாங்க பேரம் பேசுவது போல், அவனிடம் எங்களுக்காக நீ மருத்துவம் படிக்க வேண்டாம், அதே மாதிரி நீ சாதாரண ஒரு வேலைக்கு போகாம, நல்ல கணிப்பொறி பொறியியலாளரா வரணும்னு சொல்றாங்க. அவன் இதிலும் நல்ல எதிர்காலம் இருக்குனு சொல்லி வாதாடி எந்த பயனும் இல்லை. அவங்க, பணம் சம்பாதிக்கவும் , ஒரு வெற்றுப்புகழ் சுற்றுப்புறத்தில் ஏற்படுத்தவும் தனது மகனை பயன்படுத்துகின்றனர். Nata தேர்வு எழுத விண்ணப்பம் வாங்கிவரும் அவனை, அவனது தந்தை திட்டி விண்ணப்பத்தை கிழித்துவிடுகிறார். உனது விருப்பத்தின் படி , மருத்துவம் தேவையில்லை என்று நான் சம்மதித்தேன் , ஆனால் நீ என்னை அவமதிக்கிறாய் என்று கோபத்தை காட்டி செல்கின்றார். இதே விஷயத்தை அப்படியோ மீண்டும் அம்மாவும் ஒப்பிக்கின்றார் ,மென்மையாக. ஆனாலும் அவன் மனம் கடினப்பட்டது.

இயல்புக்கும் எதிர்பார்ப்புக்கும் இடையே நடந்த இந்த போராட்டத்தில் இயல்பாகவே எதிர்பார்ப்பு வெற்றி பெற்றதால், அவனும் B.E Computer Science படிக்க கல்லூரியில் சேர்ந்துவிட்டான். ஊரெல்லாம் அவனது தந்தையும் தாயும் தனது மகன் கம்ப்யூட்டர் இன் ஜினியர் சேர்ந்துட்டான்.. என்று தம்பட்டம் அடித்து மகனின் எதிர்காலக் கனவினை இவர்கள் காண ஆரம்பித்துவிட்டனர்.

ஆனால் மன அழுத்தம் அதிகரிச்சதால் அதன் விளைவு….

அவன் பித்து பிடித்தவனாய் மாறிவிட்டான். படிப்பில் ஆர்வம் இல்லாமல் மாணவர்கள் மத்தியில் தனியாக தெரிய ஆரம்பித்தான். அது கல்லூரியில் இவனை வெளியேற்றும் அளவுக்கு பெரியதாக ஆயிற்று.

பெற்றோரிடம் இவன் இனி கல்லூரிக்கு வருவது சரியல்ல என்று அனுப்ப… பெற்றோர்கள் செய்வதறியாது தவித்து அவனது எதிர்காலத்தை பாழாக்கிவிட்டு…

இந்த ஆலமர சாமியாரிடம் மந்திரிச்சா சரியாகுமா…
அங்க ஒரு சைக்கியாரிடிக் இருக்காரு ரொம்ப கைராசிக்காரராம்…
ஊருல உள்ளவங்க கண்ணு பட்டு எல்லாமே ஒண்ணாயி இப்ப குழந்தையை இப்படி ஆக்கிடுச்சு….
   இப்பக்கூட இவங்க பண்ண தப்ப உணரல….

 பெற்றோர்களின் கனவு… அதை நினைவாக்கவா குழந்தைக்கள். அல்லது குழந்தைகளின் கனவினை நிறைவேற்ற பெற்றோர்களா…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக